முடக்கப்பட்ட ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்படாட்டிற்கு வந்தது...!

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு இன்று மாலை முடக்கப்பட்டது.

Update: 2023-04-29 14:59 GMT

டெல்லி,

இந்தியா செய்தி நிறுவனங்களில் முகவும் பிரபலமான ஆங்கில செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ. இந்த செய்தி நிறுவனம் பெரும்பாலும் தங்கள் செய்திகளை டுவிட்டர் மூலம் பகிர்ந்து வருகிறது. டுவிட்டரில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தை சுமார் 76 லட்சம் பயனாளர்கள் பின் தொடர்கின்றனர்.

இதனிடையே, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு இன்று மாலை திடீரென முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கு தொடங்க பயனாளருக்கு குறைந்தபட்சம் 13 வயதாகி இருக்க வேண்டும்.

ஆனால், அந்த தகுதியை நீங்கள் அடையவில்லை என கூறி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. முடக்கப்பட்ட கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுமிதா பிரகாஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில், முடக்கப்பட்ட ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கு தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்