துப்பாக்கியால் சுட்டு வியாபாரியை கொல்ல முயற்சி
குடகில் துப்பாக்கியால் சுட்டு வியாபாரியை கொல்ல முயற்சி முன்னாள் போலீஸ் சூப்பிரண்டின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.;
குடகு:-
கடை வைப்பதில் தகராறு
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா அம்மாத்தி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சன். இவரது தந்தை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரஞ்சனின் வீட்டின் எதிரே கடை வைத்து வியாபாரம் செய்தவர் போப்பண்ணா. இவர் சித்தாபுராவை சேர்ந்தவர். போப்பண்ணாவும், அவரது நண்பரும் இந்த கடையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது ரஞ்சனுக்கு பிடிக்கவில்ைல. இதனால் கடந்த சில மாதங்களாக இந்த கடையை காலி செய்யும்படி ரஞ்சன், போப்பண்ணாவிடம் கூறினார். ஆனால் போப்பண்ணா கேட்கவில்லை.
இதனால் ரஞ்சன், போப்பண்ணா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று ரஞ்சன், போப்பண்ணாவின் கடைக்கு சென்று, காலி செய்யும் படி தகராறு செய்தார். இதனால் ரஞ்சன் மற்றும் போப்பண்ணாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த ரஞ்சன், திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போபண்ணாவை நோக்கி சுட்டார்.
துப்பாக்கி சூடு
3 முறை சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக போப்பண்ணாவின் மீது துப்பாக்கி குண்டு படவில்லை. இதையடுத்து போப்பண்ணாவின் நண்பர், ரஞ்சனை மடக்கி பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஞ்சன் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதை பார்த்த கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் மற்றும் விராஜ்பேட்டை போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை முயற்சி நடந்திருப்பதாக தெரியவந்தது. மேலும் துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்தனர். அதில் ரஞ்சனின் தந்தை முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் அவரது துப்பாக்கியை எடுத்து