உள்துறை மந்திாி அமித்ஷா தலைமையில் இன்று மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம்

மத்திய உள்துறை மந்திாி அமித்ஷா தலைமையில் மேற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

Update: 2022-06-11 06:44 GMT

டையூ,

மண்டல கவுன்சில் கடந்த 1956-ம் ஆண்டு முன்னாள் பிரதமா் நேருவினால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 5 மண்டல கவுன்சில்கள் உள்ளன. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை பேசி தீா்த்துக் கொள்கின்றன.

அதன்படி, குஜராத், மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்கள் மற்றும் தாத்ரா -நாகர் ஹவேலி மற்றும் டாமன் - டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டல கவுன்சிலின் கூட்டம் டையூவில் இன்று நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநில முதல்வர்கள் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். மாநிலங்களுக்கு இடையேயான எல்லை, பாதுகாப்பு மற்றும் சாலை, போக்குவரத்து, தொழில்கள், நீர் மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக 2 ஆண்டுக்கு பின் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்