பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார்
அரியானா மாநிலம் அம்பாலா எம்.பி ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் அம்பாலா எம்.பியும் பாஜக தலைவருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 72.
மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரான ரத்தன் லால் கட்டாரியா, உடல் நலம் பாதிக்கப்பட்டு சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் சண்டிகரில் உள்ள மணிமஜ்ராவில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.