ஒருபுறம் அல்லு அர்ஜுன்.. மறுபுறம் ராம் சரண்... ஆந்திராவில் தீவிர வாக்குசேகரிப்பில் நடிகர்கள்

ஆந்திராவில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெருகிறது.

Update: 2024-05-11 11:41 GMT

அமராவதி,

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெருகிறது. இதையடுத்து ஆந்திராவில் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாநிலத்தின் நந்தியாலா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் நண்பருமான ரவீந்திர கிஷோர் ரெட்டியின் வீட்டிற்கு அல்லு அர்ஜுன் தனது மனைவியுடன் வருகை தந்தார். தொடர்ந்து அப்பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கணக்கான மக்கள் முன்னிலையில் ரவீந்திர கிஷோருக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.

ஒருபுறம் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், மறுபுறம் பவன் கல்யாணை ஆதரித்து ராம் சரண் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை ஆதரித்து, அவரது அண்ணன் மகனான நடிகர் ராம்சரண் பிரசாரம் செய்தார்.

அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமன்றி, முன்னனி நடிகர்களும் ஒருசில கட்சிக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டது ஆந்திர அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்