ராஜஸ்தானில் உலக தரத்தில் அனைத்து ரெயில் நிலையங்களும் புதுப்பிக்கப்படும்: மத்திய மந்திரி தகவல்

ராஜஸ்தானில் அனைத்து ரெயில் நிலையங்களையும் உலக தரத்தில் புதுப்பிக்க ரூ.57 ஆயிரம் கோடிக்கு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.

Update: 2022-10-22 06:45 GMT


ஜெய்ப்பூர்,


ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களின் சந்திப்பில் இன்று பேசும்போது, ராஜஸ்தான் ரெயில்வே துறையில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, ரூ.57 ஆயிரம் கோடி திட்டம் சார்ந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில், சாதனை அளவாக ரூ.7,565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

தினசரி 12 கி.மீ. தொலைவுக்கு ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். ராஜஸ்தானில் 8 பெரிய ரெயில் நிலையங்கள் உலக தரத்திலான ரெயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதவிர, கூடுதலாக 7 ரெயில் நிலையங்களை ஆய்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களும் உலக தரத்திற்கு மாற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்