கடவுள் முன் அனைவரும் சமம்... பூசாரிகள் தான் ஜாதிகளை உருவாக்கினர் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

கடவுள் முன் அனைவரும் சமம்... பூசாரிகள் தான் ஜாதிகளை உருவாக்கினர் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.

Update: 2023-02-06 05:44 GMT

மும்பை,

இந்து மத அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேற்று மராட்டிய மாநிலம் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சிரோமணி ரோகிதாசின் 647 வது பிறந்தநாளையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,

நாம் பணம் சம்மாதிக்கும்போது சமுதாயத்தின் மீதும் நமக்கு பொறுப்புகள் உள்ளது. சமுதாயத்தின் நலனுக்காக வேலை செய்யும்போது பெரியவேலை, சிறிய வேலை என்று வேறுபாடு கிடையாது.

கடவுள் முன் நாம் அனைவரும் சமமானவர்கள்.... ஜாதி, பிரிவு என எதுவும் கிடையாது. ஜாதி வேறுபாடுகள் நமது பூசாரிகளால் உருவாக்கப்பட்டது. இது தவறானது' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்