அரசு பள்ளி வளாகத்தில் மது விருந்து; ஆசிரியர் இடைநீக்கம்
மத்தியபிரதேசத்தில் அரசு பள்ளி வளாகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில்ம் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், அந்த பள்ளி வளாகத்தில் மது விருந்து நடத்தினார். அதில் மதுவகைகளும், அசைவ உணவு வகைகளும் தாராளமாக பரிமாறப்பட்டன. மதுவிருந்தை கிராம மக்கள் சிலர் வீடியோ எடுத்தபோது, அவர்களை ஆசிரியர் அடித்து உதைத்தார்.
இதற்கிடையே, மது விருந்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி 'வைரல்' ஆனது. இதைடுத்து ஆசிரியரின் செயல், பணி நடத்தை விதிமுறைகளை மீறியது என்பதால், அவரை மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளார்.
மது விருந்து சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு பிறகு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.