சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பதவிகளும் கலைப்பு - அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை..!!
சமாஜ்வாதி கட்சியின் அனைத்து நிர்வாக அமைப்பு பதவிகளை கலைத்து அகிலேஷ் யாதவ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
லக்னோ,
சமாஜ்வாதி கட்சி அண்மையில் நடந்து முடிந்த மக்களைவை இடைத்தேர்தலில் ராம்பூர் மற்றும் அசம்கர் தொகுதிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கட்சியின் தேசிய தலைவர் பதவி தவிர அதன் அனைத்து அமைப்புகளின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகள் உடனடியாக கலைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இளைஞர்கள், மகளிர் பிரிவு உட்பட அனைத்து அமைப்புகளும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பதிவில், "சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சியின் மாநிலத் தலைவர் தவிர, கட்சியின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகளை உடனடியாகக் கலக்கப்படுகின்றன. தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், இளைஞர், மகளிர் அணிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் மாவட்டத் தலைவர்களும் கலைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.