புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல்; சி.பி.ஐ. நடவடிக்கை

கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு, புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-30 19:53 GMT

17 வங்கிகள் கூட்டமைப்பை ஏமாற்றி ரூ.34 ஆயிரத்து 615 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த மோசடி பணத்தின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் தொடர்பாக பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக சி.பி.ஐ. சோதனை நடத்திவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மராட்டிய மாநிலம் புனேயில் அவினாஷ் போசாலே என்ற பிரபல காண்டிராக்டரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹெலிகாப்டரை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்