இந்திய ராணுவத்திற்கான அக்னி வீரர்கள் தேர்வு முகாம்; மும்பையில் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிப்பு

இந்திய ராணுவத்திற்கான அக்னி வீரர்களை தேர்வு செய்யும் முகாம் மும்பையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-05 16:28 GMT

மும்பை,

முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சேர்க்கப்படும் வீரர்கள், 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கான அக்னி வீரர்களை தேர்வு செய்யும் 2-ம் கட்ட முகாம் மும்பையில் வரும் நவம்பர் மாதம் 1 முதல் 7-ந்தேதி வரை நடைபெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் மும்பை, மும்பை புறநகர், தானே, நாசிக், துலே, பல்கர், ராய்கட் மற்றும் நந்துர்பர் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை சாண்டாகுரூஸ் கிழக்கில் உள்ள மும்பை பல்கலைக்கழக மைதானத்தில் தேர்வு முகாம் நடைபெறும் என்றும், இதில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்