அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார் .

Update: 2022-06-18 18:12 GMT

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார் .

இது குறித்து அவர் கூறியதாவது ;

"வன்முறை சரியான வழி அல்ல என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் கவலைகளை அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது.அக்னிவீரர்கள் ஆயுதப்படையில் பணியாற்றி ஓய்வு பெறும்போது, ​​அவர்களுக்காக ஏதாவது ஒன்றைக் கொண்டு வருவது குறித்து விளையாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தாக்கூர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்