மே 30-க்கு பின் வெப்ப அலை குறையும்; சரசாரியை விட கூடுதல் மழை: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

வடமேற்கு இந்திய பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

Update: 2024-05-27 16:42 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோடை காலத்தின் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. வடமாநிலங்களில் வெப்ப அலை பரவல் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொகபத்ரா இன்று வெளியிட்ட செய்தியில், தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் 106 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இது சராசரி மழையை விட 4 சதவீதம் அதிக அளவில் இருக்கும். நாடு முழுவதும் சராசரியை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ளார்.

லா நினா சூழல் சாதகம் என்ற அடிப்படையில் இந்த கணிப்பு வெளிவந்துள்ளது. இதன்படி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பருக்கு இடையே இந்த மழைப்பொழிவு அதிக அளவில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று மே 30-க்கு பின் வெப்ப அலை குறையும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. எனினும், அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு இந்திய பகுதிகளில் கடுமையான வெப்ப அலை இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸிற்கு கூடுதலாக பதிவாகி இருந்தது. இதனால், எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. வீடுகளை விட்டு மக்கள் தேவைப்பட்டால் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

எனினும், பொருட்களை வினியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு இலக்காகின்றனர். இதேபோன்று மலை பகுதி நிறைந்த இமாசல பிரதேசத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வெப்பநிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்