ஜோஷிமத்தை தொடர்ந்து உத்தரகாண்ட்டில் மற்றொரு நகரிலும் வீடுகளில் விரிசல்

உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கரிவால் நகரிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

Update: 2023-01-11 15:03 GMT

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது.

இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது.

இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. இதையடுத்து ஜோஷிமத் நகரில் அதிக அளவில் விரிசல் விட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரி கரிவால் நகரிலும் வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. டெஹ்ரி ஏரிக்கு அருகே உள்ள கிராமங்களில் தொடர் நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இந்த விளைவுகள் ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்