பன்னூரை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை-மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேட்டி

பன்னூரை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி எச்.சி.மகாதேவப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-17 21:40 GMT

டி.நரசிப்புரா:-

தாலுகாவாக மாற்ற...

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா பன்னூா் டவுன் ஏ.பி.எம்.சி. வளாகத்தில் நடந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், சமூக நலத்துறை மந்திரியுமான எச்.சி.மகாதேவப்பா கலந்துகொண்டார். இந்த விழாவில் மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேசியதாவது:-

மைசூரு மாவட்டத்தில் பன்னூர் டவுன் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு டவுன் பஞ்சாயத்து, கல்வித்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், வணிக வளாகம், மார்க்கெட், கூட்டுறவு வங்கி, தேசிய வங்கி, பள்ளி, கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரி, வருவாய் துறை அலுவலகம் உள்ளன. டி.நரசிப்புரா தாலுகாவில் பெரிய நகரமாக பன்னூர் உள்ளது. நிர்வாக வசதிக்காக டி.நரசிப்புரா தாலுகாவை 2-ஆக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பன்னூரை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

அவசியம் இருக்காது

பன்னூர் தனி தாலுகாவாக மாற்றினால் இங்குள்ள மக்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். டி.நரசிப்புராவுக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது. பன்னூரை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும். முன்பு பன்னூர் சட்டசபை தொகுதியாக இருந்தது. இதையடுத்து தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு டி.நரசிப்புரா சட்டசபை தொகுதியாக மாற்றப்பட்டது. மைசூரு, டி.நரசிப்புராவுக்கு இடைப்பட்ட பகுதியில் பன்னூர் அனைத்து வகையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இன்னும் ஒரு சில பணிகள் முடிய வேண்டியது உள்ளது. அந்த பணிகள் முடிவடைந்த பிறகு பன்னூரை தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்