ஊழல் புகாருக்கு ஆளான 24 அதிகாரிகள் மீது நடவடிக்கை-மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தகவல்

வருவாய் துறையில் ஊழல் புகாருக்கு ஆளான 24 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-30 18:45 GMT

பெங்களூரு:-

வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

24 அதிகாரிகள் மீது நடவடிக்கை

வருவாய்த்துறையில் 67 அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் நிலுவையில் இருந்தன. அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 24 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதாவது தற்போது பணியில் உள்ள 11 அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற 13 அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். புகாருக்கு உள்ளானவர்களில் 30 தாசில்தார்கள், 12 கிராம கணக்காளர்கள், 14 சார்-பதிவாளர்கள் அடங்குவர்.

தண்டிக்கப்பட்டவர்களில் 2 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 9 அதிகாரிகளுக்கு பதவி இறக்கம் மற்றும் ஊதிய உயர்வு ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை தாய் துறையை போன்றது. ஏனெனில் இந்த துறை மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவை ஆகும். இதில் ஊழல் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை.

சீர்திருத்தங்கள்

இந்த ஊழலை ஒழிக்கவே வருவாய்த்துறையை எனக்கு முதல்-மந்திரி வழங்கியுள்ளார். இதன் மூலம் அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அந்த பணியை நான் தீவிரமாக செய்து வருகிறேன்.

கடந்த 2 மாதங்களில் எனது துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்