முதலிரவில் வயிற்று வலி; அடுத்த நாள் குழந்தை பெற்ற மணமகள்... மணமகன் அதிர்ச்சி

தெலுங்கானாவில் முதலிரவில் வயிறு வலிக்கிறது என கூறிய மணமகள் அடுத்த நாள் குழந்தை பெற்றது மணமகனை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.;

Update: 2023-06-29 12:48 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவானது. கடந்த 26-ந்தேதி அவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இதன்பின்னர், திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் வாழ்த்துகளை கூறி விட்டு சென்று விட்டனர்.

இந்த மணமக்களின் முதலிரவன்று, மணமகள் வயிறு வலிக்கிறது என மணமகனிடம் கூறியுள்ளார். இதனால் பயந்து போன மணமகன், உடனடியாக அவரை அழைத்து கொண்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளார். அந்த மணமகளை பரிசோதனை செய்த டாக்டர்கள், மணமகள் 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு மணமகன் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அடுத்த நாள் அந்த மணமகளுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. மணமகளின் வீட்டாருக்கு அவர் கர்ப்பம் தரித்து இருக்கிறார் என முன்பே தெரிந்து உள்ளது.

ஆனால், மணமகன் வீட்டாரிடம் இதனை அவர்கள் மறைத்து உள்ளனர் என கூறப்படுகிறது. சமீபத்தில் மணமகளுக்கு கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவரது வயிறு பெருத்து உள்ளது என மணமகன் குடும்பத்தினரிடம் மணமகள் வீட்டார் கூறியுள்ளனர்.

ஆனால், புதிதாக மணமுடித்த அந்த பெண் 7 மாத கர்ப்பிணி என டாக்டர்கள் கூறியது கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ந்து போயுள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் பற்றி இரு தரப்பினரும் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. மணமகளின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் செகந்திராபாத்தில் இருந்து வந்து, பெண்ணையும் அவரது குழந்தையையும் அழைத்து கொண்டு சென்று விட்டனர்.

அவர்கள் இருவரையும் கணவர் மற்றும் புகுந்த வீட்டார் ஏற்க மறுத்து விட்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமகள் குழந்தை பெற்றது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்