மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக டெல்லி மகளிர் ஆணைய தலைவரை அறிவித்தது ஆம் ஆத்மி

சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

Update: 2024-01-05 09:36 GMT

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுஷில் குமார் குப்தா, சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோரின் பதவிக் காலம் வருகிற 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக அந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி சஞ்சய் சிங் மற்றும் என்.டி. குப்தா ஆகியோர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். சுஷில் குமார் குப்தா அரியானா மாநில தேர்தலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதால், அவருக்கு பதிலாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலை மற்றொரு வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுக்கள் வருகிற 9-ம்தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். டெல்லி கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பு மனு மற்றும் ஆவணங்களில் கையெழுத்திட கோர்ட்டு அனுமதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்