ஆம் ஆத்மி 224 தொகுதிகளில் போட்டி

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 224 தொகுதிகளில் போட்டியிடுகிறது என அஜய் சிங் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2023-03-30 21:57 GMT

மைசூரு:-

சட்டசபை தேர்தல்

கர்நாடகவில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மேலும் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பொறுப்பாளரும், எம்.பி.மான சஞ்சய் சிங் நேற்று மைசூரு வந்தார். அவர் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் புருத்வி ரெட்டி, மைசூரு மாவட்ட தலைவர் மற்றும் வேட்பாளர் குப்பி ராணி மாளவிகா,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

40 சதவீதம் கமிஷன்

கூட்டம் முடிந்த பின்னர் அஞ்சய் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் 46 சதவீத மக்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. மாநிலத்தில் புதிய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மாநிலம் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தலில் நிற்பதற்கு ஆய்வு நடத்தினர். இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சி 224 சட்டசபை தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 80 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து உள்ளோம். அடுத்து கட்ட வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்டும். மக்களுக்கு சேவை செய்ய நேர்மையான அரசியல் வாதிகள் வர வேண்டும். மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதையடு்த்து ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையை அஞ்சய் சிங் எம்.பி. வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்