தாவணகெரேயில் வீட்டில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து சாவு

தாவணகெரேயில் வீட்டில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு

Update: 2022-05-26 15:32 GMT

சிக்கமகளூரு

தாவணகெரே (மாவட்டம்) டவுன் கே.டி.ஜே. நகர் பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 3 பேர் புகுந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை திருடிவிட்டு தப்பிக்க முயன்றனர்.


அப்போது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மின் விளக்குகளை போட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்களில் வாலிபர் ஒருவர் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கே.டி.ஜே. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கே.டி.ஜே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்தப்பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்