லாரி உடைந்ததால் நடுரோட்டில் கவிழ்ந்த ரெயில் பெட்டி... பீகாரில் பரபரப்பு...!
பிகாரில் லாரி இரண்டாக உடைந்ததால் ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பாட்னா,
பீகார் மாநிலத்தில் ரெயில் பேட்டி ஏற்றிச் சென்ற லாரி உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகல்பூரில் உள்ள உல்டா புல் பகுதியில் சாலை வழியாக லாரியில் ரெயில் பெட்டியை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். அப்போது லாரியில் திடீரென பிரேக் செயலிழந்து உள்ளது.
இதில் லாரி இரண்டாக உடைந்ததால் ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீகாரில் சாலை வழியாக கொண்டு சென்ற விமானம் மேம்பாலம் அடியில் சிக்கி விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது ரெயில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.