மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

Update: 2024-01-13 12:57 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை அருகே கல்யாண் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக கட்டிடத்தின் 18-வது மாடி வரை தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர்.

அந்த கட்டிடம் இன்னும் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத நிலையில், அதன் முதல் மூன்று தளங்களில் மட்டும் சில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்