டெல்லியில் குடிபோதை தகராறில் வாலிபர் மீது துப்பாக்கி சூடு

துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-04-07 23:09 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

ராஜஸ்தானை சேர்ந்தவர் மோகித் (வயது 26). டெல்லியில் உள்ள அவருடைய தம்பியை காண குருகிராமுக்கு வந்தார். இந்த நிலையில் அங்குள்ள வணிக வளாகத்தை சுற்றி பார்த்துவிட்டு வளாகத்தினுள் இருந்த மதுபான விடுதியில் மது அருந்தினார். அப்போது, போதையில் இருந்த மோகித், அங்குள்ள ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் தகராறு முற்றியதில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மோகித்தை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினார். ரத்தவெள்ளத்தில் சரிந்த மோகித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்