குதிரை பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை; கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தல்

குதிரை பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-11-04 23:58 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் பிரவசம் பார்க்க மறுத்த நிலையில் 2 சிசுக்களுடன் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும். டாக்டர் மற்றும் நர்சுகள் மீது கண் துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டு தப்பிக்க சுதாகர் முயற்சி செய்கிறார். தெலுங்கானாவில் ரூ.150 கோடி ஆபரேஷன் தாமரை பேரத்தில் சிக்கியவர், கர்நாடக கூட்டணி ஆட்சி கவிழ்ப்பிலும் பங்காற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பி.எல்.சந்தோஷ் என்பவரின் செயல்கள் தற்போது பகிரங்கமாகி வருகிறது. குதிரை பேரத்தில் பி.எல்.சந்தோஷ் தலைமையிலான கூட்டம் ஈடுபட்டதால் தான் எடியூரப்பா பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?. அமித்ஷா உள்துறை மந்திரியா அல்லது ஜனநாயகத்தை அழிக்கும் குதிரை பேர இடைத்தரகரா?. ஆபரேஷன் தாமரை என்ற கீழ்த்தரமான செயலில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரின் பெயர்கள் பகிரங்கமாகியுள்ளன. குதிரை பேரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்