மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் திடீர் தளர்வு

இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2023-09-29 19:26 GMT

இம்பால்,

"மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்றிரவு முழுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இன்று காலை முதலே மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பதற்றமான சூழல் தான் நிலவியது. தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நேரத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ", 

Tags:    

மேலும் செய்திகள்