வீட்டில் திடீரென பரவிய தீ.. பயத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த சிறுமி உயிரிழப்பு

வீட்டில் தீ பரவுவதை கண்ட சிறுமி, அதிர்ச்சியடைந்தார்.

Update: 2024-01-07 23:19 GMT

போபால்,

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த பெண் ஒருவர், தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்புரா பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இவர்கள் உறவினரின் வீட்டில் தங்கியிருந்தபோது அதிகாலை வேளையில், வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ, இரண்டாவது மாடிக்கு பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஏஞ்சல் ஜெயின் என்ற 13 வயது சிறுமி, பயத்தில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் தாயார் மற்றும் சகோதரர், தீ விபத்தில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்