புதுச்சேரி, காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கும் போது காவலர் உயிரிழப்பு !
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம் பகுதியில் உள்ள ஏரியில் பட்டாலியன் காவலரான யுவராஜ் (30) என்பவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குளிக்கும்போது காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.