மாம்பழம் திருடி மாட்டிக்கொண்ட காவலர்! இணையத்தில் வைரலான வீடியோ

கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளி பகுதியில், காவலர் ஒருவர் மாம்பழங்களை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-05 12:05 GMT

இடுக்கி:


Full View

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் பணிபுரியும் சிகாப்த் என்ற காவலர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஒரு கடையின் முன் ஸ்கூட்டரை நிறுத்தி, அருகில் யாரும் உள்ளனரா என தேடுகிறார். பின்னர் கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாம்பழம் திருடிய வழக்கில் காவலரை பணியிடை நீக்கம் செய்து கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஹெல்மெட் மற்றும் ரெயின்கோட் அணிந்திருந்ததால், அந்த நபரை போலீசாரால் முதலில் அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், வாகன எண் மூலம் விசாரணை மேற்கொண்ட போது காவலர் சிகாப்த் என தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்