நீ பிறந்த பின்பே தாய் மரணம் என கூறி மகளை பல முறை பலாத்காரம் செய்த தந்தை

மராட்டியத்தில் நீ பிறந்த பின்பே தாய் மரணம் அடைந்து விட்டார் என கூறி தனது மகளை பல முறை பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-10-05 13:45 GMT



மும்பை,


மராட்டியத்தின் மும்ப்ரா பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி போலீசில் திடுக்கிடும் புகார் அளித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய தானே நகர போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக தனது மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமி தைரியமுடன் போலீசில் சென்று புகார் அளித்து உள்ளார்.

இதுபற்றி விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் மாதுரி ஜாதவ் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக சிறுமியை அவரது தந்தை பலாத்காரம் செய்து உள்ளார். சிறுமி பிறந்தபோது, அவரது தாய் மரணம் அடைந்து விட்டார்.

இதனையே பலாத்காரம் செய்யும்போது காரணம் காட்டி, கூறி அவரது தந்தை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை பின்னர், தானே நகர கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை ஒரு வாரத்திற்கு போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்