4 வயது ஆண் சிறுத்தை, கூண்டில் சிக்கியது

மைசூரு அருகே, தொடர் அட்டகாசம் செய்து வந்த 4 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2022-08-12 15:36 GMT

மைசூரு;

தொடர் அட்டகாசம்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா ஹம்பாப்பூர் அருகே உள்ள சிக்கரேயூர் கிராமத்தின் அருகே வனப்பகுதி உள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யாைனகள், சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் இரைதேடி ஊருக்குள் புகுந்து வீட்டில் வளர்த்து வரும் மாடு, ஆடு ேபான்ற கால்நடைகளையும், நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளையும் அடித்து கொன்று தொடர் அட்டகாசம் செய்து வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்து சிறுத்தை ஒன்று முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தது.

இதனால் பயந்து போன கிராம மக்கள் உடனடியாக இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தா என்பவரின் பண்ணை ேதாட்டத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். அதில் ெபாறியாக சிறுத்தைக்கு மாமிசத்தை வைத்தனர்.

4 வயது ஆண் சிறுத்தை

சிறுத்தை பீதியில் இருந்த கிராம மக்கள் தங்களுடைய விளைநிலங்களுக்கு கூட போகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து இரைதேடி ஊருக்குள் நுழைந்த அந்த சிறுத்தையான, கூண்டில் ெபாறியாக ைவத்திருந்த மாமிசத்ைத சாப்பிட கூண்டுக்குள் நுைழந்தது.

அப்ேபாது சிறுத்ைத கூண்டில் வசமாக சிக்கியது. இதை பார்த்த கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்த பார்வையிட்டனர்.

மக்கள் மகிழ்ச்சி

சிறுத்தை கூண்டில் சிக்கிய தகவல் அறிந்த ஏராளமானோர் சிறுத்தையை பார்க்க குவித்தனர். மேலும் அதனை தங்களின செல்போன்களில் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டுடன் அங்கிருந்து மீட்டு எடுத்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

கூண்டில் சிக்கிய சிறுத்தையான 4 வயது உடைய ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. சிறுத்தை பிடிபட்டதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்