ஏரியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சாவு
ஏரியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சாவு.
ஆனேக்கல்:
பெங்களூரு மாகடி ரோடு அக்ரஹாராவை சேர்ந்த தம்பதியின் மகன் சக்தி (வயது 4). பள்ளி விடுமுறை என்பதால் சக்தி, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா கட்டஹள்ளியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவன் அந்தப்பகுதியில் உள்ள ஏரி அருகே விளையாடி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சக்தி, எதிர்பாராதவிதமாக தவறி ஏரிக்குள் விழுந்ததாக தெரிகிறது. இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த அவன், பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஹெப்பகோடி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் சக்தியின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் சக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.