சித்தராமையாவுக்கு, கொப்பல் மாணவி வாழ்த்து கடிதம்

இரண்டாவது முறையாக முதல்-மந்திரியான சித்தராமையாவுக்கு கொப்பல் மாணவி கடிதம் எழுதி இருக்கிறார்.

Update: 2023-06-28 21:14 GMT

கொப்பல்:

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். இதற்கு முன்பு அவர் 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சித்தராமையா 2-வது முறையாக முதல்-மந்திரியாக ஆனதை தொடர்ந்து கொப்பல் மாவட்டம் மஸ்கி டவுனை சேர்ந்த ஸ்ரீங்காவி மெனசகி என்ற 8-ம் வகுப்பு மாணவி சித்தராமையாவுக்கு வாழ்த்து கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், சித்தராமையா 2013-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த போது அன்னபாக்ய, பள்ளி குழந்தைகளுக்கு செருப்பு பாக்ய உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி வழங்குனீர்கள். அதுபோல் 2-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள நீங்கள் நல்லாட்சி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை பெற்ற சித்தராமையா அந்த சிறுமிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புள்ள ஸ்ரீங்காவுக்கு.... நீ எழுதிய வாழ்த்து கடிதம் எனக்கு கிடைத்தது. 8-ம் வகுப்பு படிக்கும் உங்களின் சமூக விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. இந்த இளம் வயதிலயே ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், விவசாயிகள் மீதான உங்கள் அக்கறை வியக்க வைக்கிறது. வாழ்க்கையில் விடா முயற்சியோடு கல்வி கற்று சமுதாய சேவையாற்ற வேண்டும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்