தமிழக அரசுபஸ் எரிக்கப்பட்ட வழக்கு: 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கடந்த 2005-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை துப்பாக்கி முனையில் கடத்தி பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.

Update: 2022-08-02 01:34 GMT

திருவனந்தபுரம்:

கடந்த 2005-ம் ஆண்டு நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த பி.டி.பி அமைப்பின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி, அவரது ஆதரவாளர்கள் 2005-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி எர்ணாகுளத்தில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை துப்பாக்கி முனையில் கடத்தினர்.

பின்னர், களமஞ்சேரி பகுதியில் வைத்து பயணிகளை இறக்கி விட்டு பஸ்சை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதுதொடர்பாக நசீர், சாபின்புகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் என்.ஐ.ஏ.(தேசிய பாதுகாப்பு முகமை) சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் பரவூரை சேர்ந்த அனூப் என்பவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. மேலும், முக்கிய குற்றவாளிகளான நசீர், சாபின் புகாரி ஆகியோர் ஏ.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நசீர், சாபின் புகாரி ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1.75 லட்சம் அபராதமும், மற்றொரு குற்றவாளியான தாஜூதீன் அடிகைக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்து கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

மேலும், குற்றவாளிகள் சிறையில் கழித்த காலத்தை தண்டனை காலமாக கருத வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்