'60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது' - சீரம் நிறுவன தலைமை அதிகாரி தகவல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயதானவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துக் கொள்ளலாம் என்று அதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-22 11:03 GMT

மும்பை,

இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இந்நிலையில் புனேவில் இன்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "இந்தியாவில் தற்போது ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானது அல்ல, இது ஒரு லேசான திரிபு மட்டுமே. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயதானவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதை செலுத்திக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது அவர்களின் விருப்பம். தற்போது நம்மிடம் 50 முதல் 60 லட்சம் வரை கோவோவேக்ஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதே அளவு கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்