ஜார்கண்ட்: பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயம்..!

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.;

Update:2022-07-24 02:55 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி அருகே மின்னல் தாக்கியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். ஜரிதிக் தொகுதியில் உள்ள பந்திக் நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம் 12.24 மணியளவில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது பள்ளி எல்லைக்கு அருகில் மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கியதில் குறைந்தது 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். அவர்களில் அதிகமாக பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு துணை வளர்ச்சி ஆணையர் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்