இரிடியம் முறையில் தொழில் அதிபர்களிடம் பணம் பறிப்பு

இரிடியம் முறையில் தொழில் அதிபர்களிடம் பணம் பறித்து வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-09 20:47 GMT

பெங்களூரு:-

பெங்களூருவில் இரிடியம் முறையை பயன்படுத்தி தொழில்அதிபர்களிடம் இருந்து மர்மகும்பல் பணம்பறித்து வந்தன. அதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் தொழில் அதிபர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக 8 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ராஜேஷ், முகமது கோஷ், ஸ்டீபன், சாகில், சீனிவாஸ், விகாஸ், குமார் உள்பட 8 பேர் என்பதும், அவர்கள் இரிடியம் முறையை பயன்படுத்தி நூதன முறையில் தொழில் அதிபர்களை குறிவைத்து பணம் பறித்து வந்தது தெரிந்தது. அவர்கள் தொழில் அதிபர்களை சந்தித்து, இரிடியம் குறித்து கூறி, அவர்களை கோடீஸ்வரர்களாக ஆக்குவதாக உறுதி அளித்து, அவர்களிடம் முன்பணமாக ரூ.5 லட்சத்தை வாங்கி கொண்டு மோசடி செய்துள்ளனர். இதேபோல் அவர்கள் பெங்களூருவில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி உள்ளது விசாரணையில் தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்