5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு: 7ஆம் நாள் முடிவில் ஏலத்தொகை ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டியது!

ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி தொகைக்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-08-01 10:26 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கவுதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து இருந்தது. 2-ஆம் நாள் முடிவில் இந்த தொகை ரூ.1,49,454 கோடி வரை கேட்கப்பட்டது. அதை தொடந்து 3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1,49,623 கோடியை எட்டியது.

நான்காம் நாள் ஏலத்தின் முடிவில், 23 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டி, ஐந்தாம் நாள் ஏலத்தின் முடிவில், 30 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியது. .

முடிவு எட்டப்படாததால் 6-வது நாள் ஏலம் நடைபெற்றது.அதில் 37 சுற்றுகள் முடிவில் ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடியை தாண்டியுது குறிப்பிடத்தக்கது.

இன்னும் முடிவு எட்டப்படாததால் 7-வது நாள் ஏலம் இன்று தொடர்ந்தது. அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி தொகைக்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்ட்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரியான தொகை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி உரிமம் பெற அதிகபட்ச டெபாசிட் தொகையாக ரூ.14 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் ஜியோ கொடுத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏா்டெல் ரூ.5500 கோடியை டெபாசிட் செய்துள்ளது.

இதன் அடிப்படையில், தகுதி புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்துக்கு 1,59,830 புள்ளிகள் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன. பார்தி ஏா்டெல்க்கு 66,330 புள்ளிகளும், வோடபோன் - ஐடியா லிமிடெட்க்கு 29,370 புள்ளிகளும், அதானி டேட்டா-வொர்க்ஸ் லிமிடெட்க்கு 1,650 புள்ளிகளும் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்