கிராம பஞ்சாயத்தில் ரூ.5.75 கோடி மோசடி: ஊழியர் மீது வழக்குப்பதிவு

கிராம பஞ்சாயத்தில் ரூ.5.75 கோடி மோசடி செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-11-19 03:23 IST

தேவனஹள்ளி: பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் கண்ணமங்களா கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக மஞ்சுநாத் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பஞ்சாயத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களிடம் பெறப்பட்ட வரியில் ரூ.5.75 கோடி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மக்களிடம் பெறப்பட்ட வரி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரூ.5.75 கோடி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஊழியர் மஞ்சுநாத் முறையான கணக்கு விபரங்களை பஞ்சாயத்தில் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து ரூ.5.75 கோடியை முறைகேடு செய்திருப்பதாக கூறி ஊழியர் மஞ்சுநாத் மீது தேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்ககப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்