இமாச்சல பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 50 பேர் உயிரிழப்பு..!

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.;

Update:2023-08-14 23:41 IST

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக கனமழை காரணமாக இரண்டு தனித்தனி சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்தனர். நேற்றிரிவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக ஏழு பேரும், சிவன் கோவில் அருகே நடைபெற்ற நிலச்சரிவில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

 

Tags:    

மேலும் செய்திகள்