உத்தரபிரதேசத்தில் 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் ஆறு மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் பல்லியா, லக்கிம்பூர் கேரி, பரூகாபாத், சீதாபூர், பிஜ்னோர் மற்றும் பாரபங்கி ஆகிய 6 மாவட்டங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக லக்னோவில் உள்ள மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்கு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை வரையில் உத்தரபிரதேசத்தில் 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி, நீரில் மூழ்கி மற்றும் பாம்பு கடி காரணமாக என்று பண்டாவில் இரண்டு பேரும், பிரதாப்கர், சோன்பத்ரா, மொராதாபாத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புடானில் உள்ள கச்லா பாலத்தில் கங்கை நதி அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.