பாலத்தில் இருந்து கீழே விழுந்து சுக்குநூறான பேருந்து.. 5 பேர் பலி

பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் காஸ் கட்டர் மூலம் மீட்டனர்.

Update: 2024-04-15 18:55 GMT

பூரி,

ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்து, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் அருகே இருந்த ஒரு பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து, பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொருங்கியது.

கீழே விழுந்து நொருங்கியதில், பயணிகள் அனைவரும் படுகாயமடைந்து பேருந்தில் சிக்கிக்கொண்டனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் காஸ் கட்டர் மூலம் மீட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்