14 வயது 9 ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 43 வயது போலீஸ்காரர் கைது...!

ஒன்பதாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-06-24 08:12 GMT

திருவனனந்தபுரம்

கேரளா மாநிலத்தை சேர்ந்த 14 வயது 9-ம் வகுப்பு மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்று உள்ளார். திடீர் என அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று உள்ளனர்.

அங்கு டாக்டர்கள அவரை பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து உள்ளது. உடனடியாக அவர்கள் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

அவர்கள் வந்து விசாரணை நடத்தியபோது தன்னை தனது தூரத்து உறவினர் மறையமுட்டத்தைச் சேர்ந்த திலீப் (43) என்பவர் கர்ப்பமாக்கியதாக கூறி உள்ளார்.இதை தொடர்ந்து ஆரியங்கோடு போலீசார் திலீப்பை கைது செய்தனர்.

திலீப் மறையூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். புகாரின் பேரில் போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்