ரூ.4½ லட்சம் கஞ்சா கலந்த சாக்லெட் பறிமுதல் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது

கோலாரில், ரூ.4½ லட்சம் மதிப்பிலான கஞ்சா கலந்த சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-07-10 15:06 GMT

கோலார் தங்கவயல்;


கஞ்சா கலந்த சாக்லெட் விற்பனை

கோலார் தாலுகா வேம்கல் டவுன் தொழில்பேட்டை பகுதியில் உள்ள குருக்கல் கிராசில் கஞ்சா கலந்த சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக கோலார் கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அப்பகுதியில் ஒருவர் கையில் பையுடன் சந்தேகம்படும்படியாக நின்றார். இதையடுத்து அவரை, கலால்துறையினர் பிடித்து அவரிடம் இருந்த கைப்பையை கைப்பற்றி பார்த்தனர். அப்போது பையில் சாக்லெட் இருந்தது. அந்த சாக்லெட்டை சோதனை செய்தபோது அதில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கலந்து இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் உத்தரபிரதேச மாநிலம் ராயபலேரியை சேர்ந்த சுபம் என்பதும், கஞ்சா கலந்த சாக்லெட்டை தயாரித்து கோலாரில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் ஒரு சாக்லெட்டை ரூ.30-க்கு விற்று வந்துள்ளார்.

ரூ.4½ லட்சம் மதிப்பு

இதையடுத்து சுபமை, கலால்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 17 கிலோ கஞ்சா கலந்த சாக்லெட்டை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4.65 லட்சம் இருக்கும்.

கைதான அவர் மீது கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்