திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் 4 மீனவர்கள் கைது

திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-20 16:58 GMT

திருவனந்தபுரம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு 12 வயது மாணவி 7-ம் வகுப்பு படித்தார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட போது அந்த மாணவியும் பள்ளிக்கு சென்றார்.

எப்போதும் கலகலப்பாக காணப்படும் அந்த மாணவி மிகவும் சோர்வுடன், எதையோ பறி கொடுத்ததை போல் இருப்பதை கண்ட பள்ளி ஆசிரியர்கள் உடல் நிலை சரியில்லையா? மருத்துவமனைக்கு அழைத்து செல்லட்டுமா? என கேட்டனர். அப்போது அந்த மாணவி ஓவென அழத்தொடங்கினார். அவரை சமாதானப்படுத்திய ஆசிரியர்கள் அந்த மாணவியின் நிலை குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினரிடம் தெரிவித்தனர். அந்த அமைப்பினர் வந்து மாணவிக்கு கவுன்சிலிங் நடத்தினர்.

அப்போது அந்த மாணவி கொரோனா கட்டுப்பாடு காலத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்துள்ளார். அப்போது மீனவர்கள் 4 பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சம்பவம் குறித்து வெளியே சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் மாணவி கூறினார்.

அதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவியிடம் பெண் போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

திருவனந்தபுரம் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு சில்பாவின் உத்தரவின் பேரில் வர்க்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு நியாஸ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மீனவர்களான வெட்டூரை சேர்ந்த கபீர் (வயது 57), அஞ்சு தெங்கை சேர்ந்த சமீர் (33), அதே பகுதியை சேர்ந்த நவாப் (25), சைனுலாத் பீன் (59) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் அந்த மாணவி அடையாளம் காட்டினார். 4 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். 4 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரும் சிறையில்அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்