30-ந் தேதி பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு
வருகிற 30-ந் தேதி பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு நடைபெறும் என்று மந்திரி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவின் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநாடு வருகிற 30-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், பிற்படுத்தப்பட்டோர் அணி தேசிய தலைவர் லட்சுமண் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதில் 5 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். இந்த மாநாடு முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தலைமையில் தான் நடக்கிறது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். தான் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக சித்தராமையா சொல்கிறார். ஆனால் அவர் எந்த திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.