மணிப்பூரில் கடைக்கு தீவைக்க முயன்ற 3 துணை ராணுவ வீரர்கள் கைது

மணிப்பூரில் கடைக்கு தீவைக்க முயன்ற 3 துணை ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-28 23:48 GMT

கோப்புப்படம்

இம்பால்,

மணிப்பூரில் பழங்குடியினருக்கும் பெருபான்மை இனத்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமானது. பதற்றம் தணியாத நிலையில் மத்திய பாதுகாப்பு வீரர்கள் அந்த மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இம்பால் அருகே நியூ செக்கன் பகுதியில் 3 அதிரடி படைவீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடைக்கு அவர்கள் தீவைக்க முயன்றதாக தெரிகிறது.

அதனை தடுத்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் 3 அதிரடி படைவீரர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் மூவரையும் மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்