தனியார் கல்லூரி விடுதியில் இருந்து 3 மாணவிகள் தப்பி ஓட்டம்; கண்காணிப்பு கேமராவில் பதிவு

தனியார் கல்லூரி விடுதியில் இருந்து 3 மாணவிகள் தப்பி ஓடினர்.

Update: 2022-09-21 21:31 GMT

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் விமான நிலைய சாலையில் தனியாருக்கு சொந்தமான பி.யூ.கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பெங்களூருவை ேசா்ந்த 2 மாணவிகளும், சித்ரதுர்காவை சேர்ந்த ஒரு மாணவியும் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் தோழிகள் ஆவார்கள். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணியளவில், விடுதியின் ஜன்னலை உடைத்து அங்கிருந்து தங்களுடைய உடைமைகளை எடுத்து ெகாண்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து விடுதியில் அவர்கள் மாயமானதை அறிந்த விடுதி காவலர் அவர்களின் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்கள் புத்தகத்தில் `நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறாம், எங்களை மன்னிக்கவும்' என்று எழுதி இருந்தனர். இதையடுத்து கல்லூரி நிா்வாகத்தினர் இதுகுறித்து கங்கநாடி டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அவர்கள் அதிகாலை 3 மணியளவில் சாலையில் உடைமைகளுடன் நடத்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்