தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ரூ.2.97 கோடி பணம் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட கணக்கில் வராத ரூ.2.97 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-08-10 09:28 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலகாட்டில், போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு வாகனத்தில் ரூ.2.97 கோடி பணம் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முறையான ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பணம் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்