நடப்பாண்டில் இதுவரை பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் 203 விபத்துகள்: 58 பேர் உயிரிழப்பு
நடப்பாண்டில் இதுவரை பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் 203 விபத்துகளில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு: பெங்களூரு-மைசூரு இடையேயான விரைவு சாலையில் நடப்பாண்டில் கடந்த 15-ந்தேதி வரை 203 விபத்துகள் நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு கூறியதாவது:-
போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பெங்களூரு-மைசூரு விரைவு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் பெங்களூருவில் இருந்து வெளியேறும் வாகனங்கள் பெங்களூரு-மைசூரு விரைவு சாலையில் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் நடைபெறுகின்றன. இதேபோல் மைசூருவில் இருந்து வரும் வாகனங்கள் சன்னப்பட்டனாவை கடக்கும் பட்சத்தில் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. அதன்படி நடப்பாண்டான 2022-ம் ஆண்டில் கடந்த 15-ந் தேதி வரை சுமார் 203 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் கடந்த 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட 300 விபத்துகளில் 77 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான விபத்துகள் டிரைவர்களின் அலட்சியத்தால் நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.