2024 நாடாளுமன்ற தேர்தல் - 3 குழுக்களை அமைத்தது காங்கிரஸ்

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

Update: 2022-05-24 07:55 GMT

புதுடெல்லி,

வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசியல் விவகாரங்கள் குழு,தேர்தல் செயற்பாட்டுக் குழு,யாத்திரைக் குழு என்ற 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

இதனிடையே,ஜெய்பூரில் சிந்தனை அமர்வு கூட்டம் காங்.தலைவர் சோனியா காந்தி தலைமையில் 3 நாட்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில், தற்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

அதன்படி,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான குழுவில் எம்பி ராகுல் காந்தி,மல்லிகார்ஜூனா கார்கே,கேசி வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்.

அதைப்போல,தேர்தல் செயற்பாட்டுக்கான குழுவில் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால்,அஜய் மேகன்,பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து,காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை செல்லும் "பாரத் ஜோடா யாத்திரையின்" திட்டமிடலுக்கான குழுவில் எம்பி ஜோதிமணி,சசி தாகூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதன்மூலம்,2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்